விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா..? உண்மைய ஒத்துக்க தயங்கமாட்டேன் - எஸ்.ஏ.சி அதிரடி!

Vijay Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Jan 28, 2024 12:47 PM GMT
Report

தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

தேசிங்கு ராஜா 2

'தேசிங்கு ராஜா' படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் எழில்.

விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா..? உண்மைய ஒத்துக்க தயங்கமாட்டேன் - எஸ்.ஏ.சி அதிரடி! | Sa Chandrasekar About Director Ezhil And Vijay

இவர் துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, தீபாவளி, மனம் கொத்திப் பறவை போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆவார்.

இந்நிலையில் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது "எழிலை பற்றி சொல்லும்போது, நான் ஒரே ஒரு கேள்வி அவரிடம் கேட்டேன்.

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன் - ரசிகர்கள் வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன் - ரசிகர்கள் வாழ்த்து!

தயங்கமாட்டேன்

அதற்கு துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பதில் சொன்னார். அந்த படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அப்போ விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா.. இல்லையே.. அந்த கதை அவரை தூக்கிவிட்டது.

விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா..? உண்மைய ஒத்துக்க தயங்கமாட்டேன் - எஸ்.ஏ.சி அதிரடி! | Sa Chandrasekar About Director Ezhil And Vijay

அந்த படத்திற்கு பிறகுதான் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமானவர்கள். உண்மையை ஒத்துக்கொள்வதற்கு நான் தயங்கமாட்டேன்.

அந்த படத்தின் திரைக்கதை அப்படி. யார் அந்த படத்தில் நடித்திருந்தாலும் சில்வர் ஜூபிலி கொண்டாடியிருக்கும்" என்று பேசியுள்ளார்.  

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்!

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்!