‘விஜய்யுடன் சண்டை உண்மைதான்... ஆனால்’ - ரகசியத்தை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

Actorvijay sachandrahekhar
By Petchi Avudaiappan Sep 17, 2021 12:20 AM GMT
Report

நடிகர் விஜய்யுடனான பிரச்சனை குறித்து அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவில் விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன்.

அதுகுறித்து வேற மாதிரி பேசுகிறார்கள். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை.

எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா... சில நாட்களில் அது கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம் என்று தெரிவித்தார்.