“ஜெயிக்கிற எண்ணமே இல்ல போல” - வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டத்தில் துபாய் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் தந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எவின் லெவிஸ் 56 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 144 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் ரசி வான் டெர் டூசென் 43, ஏய்டன் மார்க்ரெம் 51, ஹென்றிக்ஸ் 39 ரன்கள் விளாச 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தென்னாப்பிரிக்கா அணி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.