பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்பிரிக்கா - 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அபுதாபி மைதானத்தில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபாஹர் சமான் 52 ரன்கள் விளாச அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட்டுகளை இழந்து 186  ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் ரசி வான் டெர் டூசென் சிறப்பாக விளையாடி சதமடித்ததோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அந்த அணி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்