மே மேன்னு கதறினாலும்...10 ஓட்டு கூட வாங்க முடியாது !! எஸ்.வி.சேகர் தாக்கு..!!

S Ve Sekhar BJP K. Annamalai
By Karthick Dec 25, 2023 06:39 PM GMT
Report

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார் பாஜக மூத்த நிர்வாகி எஸ்.வி.சேகர்.

வெள்ள பாதிப்பு

தென் மற்றும் வடதமிழகம் சமீபத்தில் பெய்த மழையினால் கடும் பாதிப்புகளை சந்தித்தது. இதன் காரணமாக தமிழக அரசு நிவாரண நிதி கோரிய நிலையில், மாநில மற்றும் மத்திய அரசுகள் இது குறித்து ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை வைத்து வருகின்றார்.

s-ve-shekhar-slams-annamalai-in-flood-relief-talks

மத்திய அரசிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து தமிழக திராவிட கட்சிகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவரின் கருத்திற்கு பதில் கருத்துக்களும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது.

அசட்டு Ex IPS ..

அந்த வரிசையில் தான் பாஜகவின் நிர்வாகி எஸ்.வி.சேகர் மீண்டும் ஒரு முறை அண்ணாமலையை விமர்சித்து கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்நதுள்ளார். இதே அரசியலைத்தானே இங்க இந்த அசட்டு Ex IPS பண்றீங்க.

தினசரி மாநில அரசை குறை சொல்றதை தவிர மக்கள் நலனுக்கு சொந்த காசு 10 பைசா செலவு பண்ணியிருக்கீங்களா. இந்த கத்துக்குட்டி அரசியலால 10 ஓட்டு கூட வாங்க முடியாது. Wait till MAY. மே மேன்னு கதறினாலும் ஒரு பிரயோஜமிருக்காது.