தமிழகத்தில் இப்போது இருப்பது 2 டான் தான் ... உதயநிதி சொல்வது யாரை தெரியுமா?
டான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “டான்”. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி உள்ள நிலையில், அதன் உரிமையாளரும், நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
சினிமாவுல டான் னா இப்ப சிவாதான் - உதயநிதி
— Me®sal Siva®asikanda ? (@itzMersalsiva) May 6, 2022
"டாக்டரை விட பெரிய ஹிட்டாகும் 'டான்'"- உதயநிதி ஸ்டாலின்#Sivakarthikeyan | #UdhayanidhiStalin | #Don pic.twitter.com/1M6ziaRaR1
நிகழ்ச்சியில் பேசிய அவர், படத்தில் கல்லூரி போர்ஷன் மட்டுமில்லை. ஸ்கூல் போர்ஷனில் கூட சிவகார்த்திகேயன் சின்ன பையனா சூப்பராக நடித்துள்ளார். 10 நாட்களுக்கு முன்பாகவே படத்தை பார்த்து விட்டேன். நல்ல படத்தை பார்த்த ஃபீலிங் வந்துச்சு. டாக்டரை விட டான் சிறப்பாக இருக்கும் என்றார். மேலும் இப்போதைக்கு தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் என உதயநிதி கூற சிவா எழுந்து நின்று கையை எடுத்துக் கும்பிடு போட்டு விட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இவங்க ரெண்டு பேரு தான் இப்போதைக்கு தமிழ்நாட்டின் டான் என்றார். இவங்க எழுதி, இசையமைத்து பாடும் பாடல்கள் எல்லாமே வேறலெவல் ஹிட் அடித்து வருகிறது என்றும் உதயநிதி பாராட்டினார். ஆனால் படத்தின் டிரைலரின் இறுதியில் அரசியல்வாதினாலே பொய் பேசணும் என்கிற வசனம் இடம் பெற்று இருக்கும்.அதனை குறிப்பிட்டு உடனடியாக தான் சொன்னது பொய் என்பது போல பேசி ஸ்கோர் செய்ய கூடியிருந்த ரசிகர்கள் அவரது பேச்சை ரசித்து கேட்டனர்.