இயக்குநர் ஷங்கரிடம் 3 மணி நேரம் அமலாக்கப்பிரிவினர் கிடுக்கிப்பிடி விசாரணை - நடந்தது என்ன? - ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர்.
இவர் தனது மகளின் திருமண வரவேற்பினையும் பிரம்மாண்டமாக செய்ய அண்மையில் 10 கோடி ரூபாயில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால், திடீரென வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால் பின்னர் அந்த செட் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந்நிலையில், ஷங்கர் தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜரானார்.
அமலாக்கத்துறை துணை இயக்குநர் மல்லிகா அர்ஜுனா முன்பு விசாரணைக்கு ஆஜராகி, அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற செய்த குற்றச்சாட்டிற்காக இந்த விசாரணை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஷங்கரிடம் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடந்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், ஷங்கர் அளித்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான எந்த முழு விவரமும் வெளியாகவில்லை. விசாரணைக்கு பின்னர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஷங்கர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி இருக்கும் தகவல் எப்படியோ செய்தி ஊடகங்களுக்கு தெரிந்ததது. இதனையடுத்து, அலுலகத்தில் வாசலில் ஷங்கரிடம் அது குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் பெருமளவில் குவிந்தனர்.
ஆனால், இதை அறிந்த ஷங்கர் தன்னுடைய இன்னோவா காரில் முன் வாசல் வழியாக செல்லாமல் விசாரணை முடிந்ததும் பின்வாசல் வழியாக வாடகை காரில் எஸ்கேப் ஆகி உள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் -2’ படம் பிரச்சினையால் பாதியில் உள்ளது. தற்போது, ஷங்கர் ராம்சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.