பா.ம.க.வுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி - ராமதாஸ்

politics
By Nandhini Apr 14, 2021 11:35 AM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் CBSE பாடத்திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. கொரோனா காலத்தில் மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை இதுவாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தான் குரல் கொடுத்து வந்தது.

அந்த வகையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து, மத்திய அரசின் நடவடிக்கை எடுத்துள்ளதை, பா.ம.க.வுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் CBSE போன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார். 

பா.ம.க.வுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி - ராமதாஸ் | S Ramadoss