தம்பி ரஹ்மான் முதல்ல உங்கள் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றுங்க : பாஜக பிரமுகர் ட்விட்டால் பரபரப்பு
முதலில் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்தாரின் பெயரை தமிழில் மாற்றட்டும் பிறகு தமிழை பற்றி பேசலாம் என தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்
இரண்டு ஆஸ்கர்விருதுகளை வென்ற ஏ.ஆர் ரஹ்மான் விருது வாங்கிய ஆஸ்கர் மேடையிலேயே தமிழில் பேசி தமிழர்களை உலகமெங்கும் பெருமை பட செய்தார்,தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக ‘‘மூப்பில்லா தமிழே’’ என்ற இசை தொகுப்பினை வெளியிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைதான் ஏற்கவேண்டும் என்று கூறிய நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழின் அடையாளமாக ஒரு புகைப்படத்தையும் தமிழணங்கு என பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்தான் இணைப்பு மொழி என கூறினார். ரஹ்மானின் இந்த கருத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு பதிலடியாக கருதப்பட்ட நிலையில் பாஜக தலைவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக பொருளார் எஸ்.ஆர். சேகர் தனது ட்விட்டர் பதிவில்:
தம்பி AR ரகுமான் பேச்சை வரவேற்கிறேன். அதே சமயம் முதலில் ரகுமான் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும். துவாவை உருதுவிலிருந்து தமிழுக்கு மாற்றட்டும் பிறகு தமிழக அரசு குறைந்தது ஒரு 5 இந்தி State ல் தமிழ் கற்பிக்க நிதி ஒதுக்கி இதற்கு ரகுமான் உதவினால் தமிழ் பரவும் என பதிவிட்டுள்ளார்.

பொதுவான கருத்திற்கு ஏன் ரஹ்மான் தனது குடும்பத்தின் பெயரை மாற்ற வேண்டும் என எஸ் ஆர் சேகர் மீது இணைய வாசிகள் கொந்தளித்து வருகின்றனர்