முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு
அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்தவர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் வீடுகளில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நிறைவு
பின்னர் முன்னாள் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடந்து வந்தது. இந்த நிலையில் கோவையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், சோதனை நிறைவு பெற்றுள்ளது.
மேலும் கோவை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த சோதனைகளும் நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.