வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை நேரில் சந்தித்தார் அண்ணாமலை...!
டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார்.
மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் - அண்ணாமலை சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு 8 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த நிலையில் அண்ணாமலை டெல்லி சென்றார்.
இந்நிலையில், டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் சென்றனர். இலங்கையின் 13-வது சட்டதிருத்தத்தை உடனே கொண்டுவர மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அந்த சந்திப்பில் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
