எல்லாம் சரி இதையும் செய்வாரா சைலேந்திரபாபு? - அன்புமணி கேள்வி
பிரச்சனைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் சைலேந்திரபாபு நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியை பா.ம.ககட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அன்புமணி கேள்வி
பாமக கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் துப்புதுலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
நடவடிக்கை எடுப்பாரா
இது மிகவும் சரியான செயல். ஊக்குவிப்பு தான் காவல்துறையினருக்கு உத்வேகம் அளிக்கும். நானும் பாராட்டுகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் துப்புதுலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சரியான செயல். ஊக்குவிப்பு தான்…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 31, 2023
அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து இன்றுடன் 5 மாதங்கள் 6 நாட்களாகிவிட்டது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா?