‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா; தாயை கண்டுக்காமல் சென்ற நடிகர் விஜய் - ஷாக்கான ரசிகர்கள்...!

Vijay Shobana S. A. Chandrasekhar
By Nandhini Dec 27, 2022 05:59 AM GMT
Report

‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் தாய் ஷோபனாவை யாரோ மாதிரி பார்த்துவிட்டு சென்ற நடிகர் விஜய்யின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும். இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.

‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா

சமீபத்தில் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. வழக்கமாக ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் ஹைலைட்டாக அமையும்.

ஆனால் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அரசியல் நெடி இல்லாமல் சிம்பிளாக விஜய் பேசினார். என்றாலும் வழக்கம்போல் குட்டிக்கதை ஒன்றையும் விஜய் கூறினார்.

s-a-chandrasekhar-shobana-vijay

தாயை பார்த்து யாரோ மாதிரி சென்ற விஜய்

இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நடைபெற்ற ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் வருகை தந்தார். அப்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் நடிகர் விஜய்க்கு கை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். அந்த நேரத்தில் தாய் ஷோபனாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜய்யை பார்த்ததும் எழுந்து நின்றனர்.

அப்போது, விஜய் மற்றவர்களுக்கு கை கொடுத்து வந்தபோது, தாய்க்கும், தந்தைக்கும் கை கொடுத்துவிட்டு யாரோ மாதிரி செல்ல, தாய் ஷோபானா விஜய்யை ஏக்கத்தோடு பார்க்கிறார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், அண்ணா... உங்கள் கருத்து என்ன... பார்க்கவே மனம் வெறுக்கிறது.. எப்படி ஏறி வந்தாயென்ன மிதிக்கிறது.. மனிதனாக ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரை நன்றாக நடத்த வேண்டும்.. அம்மா ஷோபாவின் ஏக்க முகத்தைப் பாருங்கள்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.