‘’ ஏழு வருஷம் கழித்து மறுமணம் ‘’ தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ சந்திரசேகர்
பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர், விவாகரத்து பற்றி வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
எஸ்.ஏ சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அதிலும் இந்த வீடியோவை நன்றாக யோசித்த பிறகே வெளியிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ரசிகனின் குரல் 👇
— S A Chandrasekhar (@Dir_SAC) January 18, 2022
link: https://t.co/03gPxbmic7@SunTV @sunnewstamil @polimer88 @BBCBreaking @bbctamil @News18TamilNadu @news7tamil @galattadotcom @behindwoods @igtamil @PTTVOnlineNews @vikatan @maalaimalar @toptamilnews @ThanthiTV pic.twitter.com/6iCZPZkRYy
அதில் அவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் திருமண முறிவைப் பற்றி பேசுவதாக தெரிகிறது. இந்த வீடியோவில் திருமணம் என்பது அனுசரித்து வாழ்வது என்றும், விவாகரத்து செய்துக் கொள்பவர்களைப் பற்றி கேள்விப்படும்போது, தானும் மனைவியும் சென்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற பொருளில் பேசிய அவர், தனது வீட்டிற்கு தெரிந்த கணவன் - மனைவி 7 ஆண்டுகள் பிரிந்து அதன்பின்னர் மனம் மாறி மறுமணம் செய்துகொண்டனர்.
ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிவு குறித்து மிகுந்த வருத்தத்துடன் ஒரு ரசிகனாக பேசுகிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.