“மிகப்பெரிய சொதப்பல்”... பீஸ்ட் படத்தில் இயக்குநர் செய்த மிகப்பெரிய தவறு - கடுப்பான எஸ்.ஏ.சந்திரசேகர்
பீஸ்ட் படம் குறித்து இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே,, இயக்குநர் செல்வராகவன் உட்பல பலரும் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக படத்தில் லாஜிக் இல்லை என்றும், விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனிடையே பீஸ்ட் படம் குறித்து இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில கருத்துகளை பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் உலக அளவிலான தீவிரவாதிகள் - ரா ஏஜென்ட் போன்ற கனமான கதைக்களத்துடன் களமிறங்கும் போது முதலில் அதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஹீரோ கிடைத்து விட்டார் என்பதற்காக இப்படியெல்லாம் எடுக்கக்கூடாது என எஸ்.ஏ.சி கூறியுள்ளார். மேலும் படத்தின் வெற்றியே திரைக்கதையில் தான் உள்ளது என்றும், தன்னை பொறுத்தவரை அந்த படத்தில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இசையமைப்பாளர், சண்டைப் பயிற்சியாளர் என அனைவரும் இருக்கின்றனர். ஆனால் திரைக்கதை இல்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் காட்டமாக கூறியுள்ளார்.