அந்த சமயத்தில் விஜய் அப்படி அழுதார்; அதற்கு காரணமே இதுதான் - உண்மை உடைத்த தந்தை!

Chandrasekhar Vijay Tamil Cinema Vijayakanth
By Sumathi Jan 09, 2024 02:30 PM GMT
Report

விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துகையில் விஜய் அழுதது குறித்து அவரது தந்தை பேசியுள்ளார்.

விஜய்காந்த் மறைவு

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. பல பிரபலங்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அந்த சமயத்தில் விஜய் அப்படி அழுதார்; அதற்கு காரணமே இதுதான் - உண்மை உடைத்த தந்தை! | S A Chandrasekar About Vijay Cry Vijayakanth Death

அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், நடிகர் விஜய் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது விஜயகாந்த்தின் உடலை சில நொடிகள் பார்த்தவாறு நின்றுகொண்டே கண் கலங்கினார். அது காண்போரை உருகச் செய்தது.

விஜய்க்கு அந்த பிரபலத்தின் மகள் மேல்தான் ஆசை; இடையில் வந்த சங்கீதா - பகீர் கிளப்பிய பிரபலம்!

விஜய்க்கு அந்த பிரபலத்தின் மகள் மேல்தான் ஆசை; இடையில் வந்த சங்கீதா - பகீர் கிளப்பிய பிரபலம்!

கலங்கிய விஜய்

இந்நிலையில், விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், "விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் ஒழுங்காக அஞ்சலி செலுத்தாதது நடிகர் சங்கத்துக்குத்தான் அசிங்கமே ஒழிய விஜயகாந்த்துக்கு துளிக்கூட அசிங்கம் இல்லை. அவர் சண்டை போடும்போது மட்டும்தான் 20 பேரை அடித்தாலும் நம்பும்படியாக இருக்கும்.

vijay tribute to vijayakanth death

ஏனெனில் அவரது உடல் அமைப்பு அப்படி. விஜயகாந்த் உடலை பார்த்து விஜய் கண் கலங்கியதற்கு காரணம் நன்றி விசுவாசம்தான். நாம் இந்த இடத்துக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் அவரும் ஒருவராக இருந்திருக்கிறாரே என நினைத்தால் போதும். அதுதான் கண்களில் கண்ணீராக வந்து அஞ்சலி செலுத்த வைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.