தோனியிடம் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லை- ருதுராஜ் கெய்க்வாட் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

1 week ago

தோனியிடம் ஒரு நிகழ்வு குறித்த கேள்வியை கேட்பதற்கு எந்தவொரு வீரருக்கும் தைரியம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது ஓய்வு முடிவை பலரும் அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது என்றே சொல்லலாம்.

இந்தநிலையில் பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள கெய்க்வாட் , தோனி ஓய்வு அறிவித்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் நான் உட்பட 10-12 வீரர்கள்தான் இருந்திருப்போம். அப்போது தனக்கு தோனியின் முடிவு குறித்து எதுவும் தெரியாது என்றும் அவரிடம் ஓய்வு முடிவை கேட்க நான் உள்பட எந்த வீரருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தான் அப்போது புதுமுக வீரர் என்பதால் தோனியிடம் கேட்கவில்லை என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்