கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் - எந்த அணிக்கு தெரியுமா?
சையது முஷ்டாக் அலி போட்டியில் சென்னை அணி வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அந்த தொடரிலேயே அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தியவர் ருத்துராஜ் கெய்க்வாட். அவர் தனது அபாரமான திறமை மூலம் எதிர்கால இந்திய அணியின் சிறந்த வீரராக திகழ்வார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள சையது முஷ்டாக் அலி போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருத்துராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் கேதார் ஜாதவ் போன்ற சீனியர் வீரர்கள் இருந்த போதும் ருத்துராஜ் சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக கேப்டன் ஆகியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.