தோனிக்கு அறிவுரை வழங்கும் சென்னை அணி வீரர்: ருத்ராஜ் சொன்ன ரகசியம்

Faf du plessis Ms dhoni ruturaj gaikwad
By Petchi Avudaiappan Jun 06, 2021 12:33 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி குறித்த சுவாரசிய தகவலை சக வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். அவரது கேப்டன் பணியை முன்னாள், இந்நாள் வீரர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். 

தோனிக்கு அறிவுரை வழங்கும் சென்னை அணி வீரர்: ருத்ராஜ் சொன்ன ரகசியம் | Ruturaj Gaikwad Telling Secret About Msdhoni

இதனிடையே சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் தோனி குறித்த சுவாரசிய தகவலை தெரிவித்துள்ளார்.

அதில் தோனி சில சமயங்களில் சக வீரர் டு பிளசிஸிடம் தான் அறிவுரைகளை கேட்பார் என்றும், அதை பெருந்தன்மையோடு தோனி ஏற்றுக் கொள்வார் என்றும் கூறியுள்ளார். மேலும் இருவரும் மிகவும் அமைதியான ஒரு வீரர்கள். ஆட்டத்தில் எப்பொழுது என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் ஸ்மார்ட் கிரிக்கெட் வீரர்கள் என்று கெய்க்வாட் புகழ்ந்துள்ளார்.