நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் - ருதுராஜ் கெய்க்வாட் விலகல்.. - ரசிகர்கள் அதிர்ச்சி...!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ள தகவல் அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
சமீபத்தில் இந்தூரில் நடைபெற்ற கடைசி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இப்போட்டியின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கி அதிரடியாக ரன்களை குவித்து அசத்தினர்.
இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்கள் எடுத்து, 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
ருதுராஜ் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற இருக்கிறது.
இத்தொடருக்கான இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
ருதுராஜ் விலகியுள்ள தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ruturaj Gaikwad ruled out of New Zealand T20Is due to wrist injury ? #INDvNZ #CricketTwitter pic.twitter.com/rxaA7fZX8X
— CricketTimes.com (@CricketTimesHQ) January 27, 2023