சென்னை அணியில் இணைந்த இளம் சிங்கக்குட்டி - ரசிகர்கள் நிம்மதி
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் நட்சத்திர வீரர் மீண்டும் இணையவுள்ளார்.
15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நடப்பு சாம்பியனான சென்னை அணி ரெய்னா, ஷர்துல் தாகூர், பாப் டூபிளெசிஸ் போன்ற வீரர்கள் இல்லாமல் இம்முறை களமிறங்க உள்ளது.
அதேசமயம் அணியின் நட்சத்திர வீரர்களான தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில் காயம் குணமடைந்து உடற்தகுதியை நிரூபித்துள்ள ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணியில் இணைந்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
Reeling with joy when he comes IN! ?#WhistlePodu ?? @Ruutu1331 pic.twitter.com/pCGSBkQvzR
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) March 16, 2022