Wednesday, Jul 9, 2025

வா மகனே..என் வெற்றி மகனே..வீடு திரும்பிய ருதுராஜ்க்கு தாய் அன்போடு வரவேற்பு

CSK IPL 2021 Ruturaj Gaikwad House Return
By Thahir 4 years ago
Report

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றி தனது இல்லத்திற்கு திரும்பிய ருத்துராஜூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர்களாக உள்ள ருதுராஜ், இந்தத் தொடரில் அதிகமான ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

16 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் 635 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு சதம், 4 அரை சதம் அடித்துள்ளார். 23 சிக்ஸர்களும், 64 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

மேலும், மிக இளம் வயதில் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்கு ருதுராஜ் சொந்தக்காரர் ஆனார்.

இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ்க்கு சீனியர் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து தனது இல்லத்திற்கு சென்ற ருத்துராஜூக்கு அவரது தாய் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சி பொங்க வரவேற்பு அளித்தார்.

இது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 2021 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகக் கைப்பற்றியுள்ளது.