நான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய ருதுராஜ் கெய்க்வாட்..!
காயம் காரணமாக ஓய்வில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் கடந்த 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.
இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கு தயாராகும் வகையில் வலைப்பயிற்சி மேற்கொண்டபோது காயம் ஏற்பட்டது.
இந்த காயம் குணமடைந்து, அணிக்கு தயாராகும் வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார்.
காயம் குணமடைவதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டார். இந்த நிலையில், காயம் குணமடைந்து உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.
இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றார். தகுதி பெற்றதும் சூரத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சென்று இணைந்துள்ளார்.
ஏற்கனவே டு பிளிஸ்சிஸ் அணியில் இருந்து சென்ற நிலையில், ருதுராஜ் காயம் சி.எஸ்.கே. அணியை கவலை அடையச் செய்தது. தற்போது அணியில் இணைந்துள்ளது சி.எஸ்.கே. ஆறுதலை கொடுத்துள்ளது.