மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தண்ணி காட்டிய கெய்க்வாட்

CSK IPL 2021 Ruturaj Gaikwad
By Thahir Sep 20, 2021 03:11 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டி துபாயில் இன்று துவங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தண்ணி காட்டிய கெய்க்வாட் | Ruturaj Gaikwad Csk Ipl 2021

முதல் பாதியில் 29 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 30 வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, சென்னை அணியின் முக்கிய வீரரான டூபிளசிஸ் முதல் ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய மொய்ன் அலி (0), சுரேஷ் ரெய்னா (4), தோனி (3) என அனைத்து சீனியர் வீரர்களும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் போட்டியின் தன்மையை உணர்ந்து மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தண்ணி காட்டிய கெய்க்வாட் | Ruturaj Gaikwad Csk Ipl 2021

ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு சரியான ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய ஜடேஜா 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

ஜடேஜா விக்கெட்டை இழந்த பிறகு அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த ருத்துராஜ் கெய்க்வாட் இறுதி ஓவர் வரை மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்களும், போட்டியின் 19வது ஓவரில் டூவைன் பிராவோ அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி வெறும் 8 பந்தில் 23 ரன்கள் எடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 156 ரன்கள் குவித்துள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியில் யாருமே எதிர்பாரத வகையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சென்னை அணியின் மானத்தையும் காத்த ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் ருத்துராஜ் கெய்க்வாட்டை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.