கெட்ட பையன் சார் ருத்துராஜ்..ரொம்ப ஆபத்தானவன்..ஸ்டீபன் பிளமிங் அதிரடி கருத்து
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய ருத்துராஜ் கெய்க்வாட்டை சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் வெகுவாக பாராட்டினார்.
ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தாலும், சென்னை அணிக்காக 60 பந்துகளில் சதம் அடித்திருந்த ருத்துராஜ் கெய்க்வாட்டை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் புகழ்ந்து பேசி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் ருத்துராஜ் கெய்க்வாட்டை, சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் பாராட்டி பேசியுள்ளார்.
ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து பிளமிங் பேசுகையில், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் விளையாடி விதம் சிறப்பாக இருந்தது.
ஒரு வீரர் சதம் அடித்த போதிலும் தோல்வியடைந்தது சற்று வேதனையான விசயம் தான். நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதற்காக ருத்துராஜ் கெய்க்வாட்டை பாராட்டாமல் இருக்க முடியாது.
ருத்துராஜ் கெய்க்வாட் எங்கள் அணியின் மிக முக்கியமான வீரர். ருத்துராஜ் கெய்க்வாட் யார்., அவரால் என்ன செய்ய முடியும்..?
நாங்கள் ஏன் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை தற்போது அனைவரும் அறிந்திருப்பார்கள். அவரை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.