‘’யாருடா இவன் ,யாருடா இவன் ஊற கேட்ட தெரியும் ‘’ - ருத்ரதாண்டவம் ஆடிய ருத்ராஜ் ஹாட்ரிக் சதம் விளாசி அசத்தல்

ruturajgaikwad vijayhazaretrophy centuries
By Irumporai Dec 11, 2021 11:36 AM GMT
Report

விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஹாட்ரிக் சதம் விளாசி விளாசி ருதுராஜ் கெய்க்வாட் அசத்தியுள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இன்றைய போட்டியில் மகாராஷ்டிரா அணி, கேரளாவுடன் மோதி வருகின்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மகாராஷ்டிராஅணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், யாஷ் நகார் களமிறங்கினர்.

வந்த வேகத்தில் நகார் 2 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க அடுத்து வந்த பௌன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையை கட்டினார். இதனால், மகாராஷ்டிரா அணி 22 ரன்னிற்கு 2 விக்கெட்டை இழந்தது.

பின்னர் கேப்டன் ருதுராஜ் , ராகுல் திரிபாதி ஆகியோர் கூட்டணி அமைத்து ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 124 ரன்களும், ராகுல் திரிபாதி 99 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 291 ரன் எடுத்தனர்.

292 ரன் இலக்குடன் கேரளா அணி விளையாடி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா அணி கேப்டன் ருதுராஜ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் சதம் விளாசியுள்ளார்.

முதல் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 136 ரன்களும், அடுத்து போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 154 ரன்களும், தற்போது கேரளா அணிக்கு எதிராக 124 ரன்கள் அடித்துள்ளார்.

சிஎஸ்கே ரசிகர்கள் ருத்துராஜின் ஹாட்ரிக் சதத்தை கொண்டாடி வருகின்றனர். மகாராஷ்டிரா அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.