’’அவருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சு’’- ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா காரணம் என்ன?
ரஷியாவில் சிறையில் கைதியாக உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி உயிரிழந்தால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷியஅதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக எதிர்த்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி.
கடந்த ஆண்டு நவால்னி ஐ கொலை செய்ய திட்டமிட்டு விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்ற விஷத்தை கலந்து கொடுத்தனர்.
இந்த சம்பவத்தால் அவர் இறக்கும் நிலைக்கு சென்றார், இந்த சம்பவத்திற்கு அதிபர் புதினின் அரசுதான் காரணம் என செய்திகள் வெளியாகியன.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக ஒன்று திரண்டன.
சிகிச்சை முடித்த நவால்னி ஜெர்மனியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 17ந் தேதி மீண்டும் ரஷியா திரும்பியபோது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பழைய பண மோசடி வழக்கில் இருப்பதாக அவரை கைது செய்ததாக ரஷிய போலீசார் கூறினர்
இந்த வழக்கில் அவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் தற்போது சிறையில் உள்ள நவால்னி வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு மருத்துவ வசதி வேண்டுமெனகடந்த மாதம் 31-ந் தேதி முதல் சிறையில் நவால்னி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகிவருகிறது. அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் சிறையில் நவால்னி உயிரிழந்தால் கடுமை யான பின்விளைவுகளைசந்திக்க நேரிடும் என ரஷியாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் சிறையில் நவால்னி நடத்தப்படும் விதம் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை நியாயமற்றது முற்றிலும் பொறுப்பற்றது" என 2கூறியுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நவால்னி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
.
இதனிடையே நவால்னிக்கு சிகிச்சை அளிக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் வரும் புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil