உக்ரைனின் மிகப் பெரிய பாலத்தை தரைமட்டமாகியது ரஷ்யா படைகள்..!

Ukraine Bridge Destroyed RussiaUkraineWar Russians
By Thahir Mar 23, 2022 09:56 PM GMT
Report

உக்ரைனின் மிகப் பெரிய பாலத்தை ரஷ்யா படைகள் தரைமட்டமாகியுள்ளது.

உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ் நகரை ரஷ்யா படைகள் சுற்றி வளைத்துள்ளன. இந்த நகரில் தண்ணீர் கிடையாது. மின்சாரம் கிடையாது.

இங்கு பொதுமக்கள் வெளியேற உதவிய முக்கிய பாலத்தை ரஷ்யா படைகள் குண்டுவீசி அழித்துள்ளன. இந்தப் பாலம்தான் மக்களுக்கு மனித நேய உதவிகள் சென்றடையவும் உதவியது.

இந்தப் பாலம் அங்குள்ள டெஸ்னா ஆற்றைக்கடந்து, செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன் இணைக்கும். இந்தப் பாலத்தை ரஷ்யா படைகள் தரை மட்டம் ஆக்கியதை பிராந்திய கவர்னர் வியாசெஸ்லாவ் சாஸ் உறுதி செய்துள்ளார். இது செர்னிஹிவ் நகர மக்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.