அதோடுதான் வாழ்ந்தோம்; சாகவில்லை - குழந்தைகளுடன் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்
ரஷ்ய பெண் குழந்தைகளுடன் குகையில் வாழ்ந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ரஷ்ய பெண்
கர்நாடகா, கொகர்னா வனப்பகுதியில் இருந்த மலைக்குகையில் ரஷ்ய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, போலீஸார் அங்கு சென்ற போது அங்கிருந்த குகைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. மற்றொரு குழந்தையும், அதன் தாயாரும் அருகில் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களை எழுப்பி விசாரித்ததில், அப்பெண்ணின் பெயர் நினா குதினா(40) என்று தெரிய வந்தது. ரஷ்யாவை சேர்ந்த் நினா 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரது விசா காலாவதியான பிறகும் தொடர்ந்து இந்தியாவிலேயே வசித்து வந்துள்ளார்.
குழந்தைகளுடன் குகையில்
குகைக்குள் பிளாஸ்டிக் சீட்டை விரித்து அதில் படுத்து உறங்கினர். தேவையான உணவுப்பொருட்களை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று வாங்கி வந்துள்ளார். அப்படி செல்லும்போது மொபைல் போனுக்கு சார்ஜிங் செய்து கொண்டுள்ளார்.
மேலும், குகையில் இருந்து கொண்டு யோகா, தியானம் போன்ற ஆன்மிக காரியங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் வசிக்கவில்லை என்றும், உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் தந்தை யார் என்பதை நினா தெரிவிக்க மறுத்துவிட்டார். தற்போது அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு துமகுரு பெண்கள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.