ரஷ்ய கப்பல் தாக்கப்பட்ட போதே 3-ம் உலகப்போர் தொடங்கிவிட்டது; சிக்கலில் நேட்டோ நாடுகள் - ரஷ்ய தொலைக்காட்சி அதிரடி

blacksea worldwar3 moskvasubmarine russianstatetv russia1 russiansubmarine
By Swetha Subash Apr 16, 2022 06:43 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

போர் தீவிரமடைந்திருப்பத்தை பாதுகாப்பாக மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கலாம் என ரஷ்ய தொலைக்காட்சி தொகுப்பாளர் கூரியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததன் எதிரொலியாக அந்நாட்டு மீது ரஷ்யா 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் பல பகுதிகளில் உக்ரைன் ராணுவம் தக்க பதிலடியைக் கொடுக்க தொடங்கியதால் போர் தொடங்கிய அடுத்து சில நாட்களில் உக்ரைன் நாட்டில் ரஷ்யாவால் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற முடியவில்லை.

குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படைகள் பெரும் முயற்சி செய்தன. ஆனால் உக்ரைன் நாட்டு வீரர்களின் எதிர்தாக்குதலால் அந்த நகருக்குள் நுழைய முடியவில்லை.

இதையடுத்து கீவ்வை சுற்றியுள்ள படைகளை குறைத்துகொண்ட ரஷ்யா, தற்போது கிழக்கு உக்ரைன் பகுதி மற்றும் மரியுபோல் நகரம் மீது கவனம் செலுத்தி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

ரஷ்ய கப்பல் தாக்கப்பட்ட போதே 3-ம் உலகப்போர் தொடங்கிவிட்டது; சிக்கலில் நேட்டோ நாடுகள் - ரஷ்ய தொலைக்காட்சி அதிரடி | Russian State Tv Declares World War 3 Over Moskva

இதற்கிடையே நேற்று கருங்கடலில் இருந்து ரஷ்யாவின் போர்க் கப்பலான மோஸ்க்வா மீது ஏவுகணைகள் வீசப்பட்டதில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. ரஷ்ய போர்க்கப்பல் மீது நெப்டியூன் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் என உக்ரைன் தெரிவித்தது.

ரஷ்ய கப்பல் தாக்கப்பட்ட போதே 3-ம் உலகப்போர் தொடங்கிவிட்டது; சிக்கலில் நேட்டோ நாடுகள் - ரஷ்ய தொலைக்காட்சி அதிரடி | Russian State Tv Declares World War 3 Over Moskva

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நேற்று பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

இந்நிலையில் ரஷ்ய போர்க்கப்பல் மீது நடத்திய தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில்,

கருங்கடலில் ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பலான மோஸ்க்வாவில் (Moskva) வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாகவும், அதைத்தொடர்ந்து கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், ரஷ்யாவின் ஊடகமான ‘ரஷ்யா 1’ தொலைக்காட்சி இப்போது நடப்பது உக்ரைனுக்கு எதிரான போர் அல்ல, நேட்டோ நாடுகளுக்கு எதிரான போர் . அப்படியெனில், இது நிச்சயம் மூன்றாம் உலகப்போர் தான் என கூறியுள்ளது.

ரஷ்யா 1 தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபேவ் கூறுகையில், போர் தீவிரமடைந்திருப்பத்தை பாதுகாப்பாக மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கலாம், அது மட்டும் உறுதி" என்று கூறினார். அவர் பேசிய இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.