6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி : உக்ரைன் அதிபர்

Russia RussiaUkraineWar ThirdWorldWar
By Irumporai Mar 02, 2022 11:16 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்த வகையில்,7 வது நாளாக உக்ரைனின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ரஷ்ய ராணுவம்  உக்ரைனில் கடும் சேதத்தை ஏற்படுத்திவருகிறது . மேலும், உக்ரைனி. வளர்ச்சியினை தரும்  கெர்சன் நகரை முழுமையை கைப்பற்றியுள்ளது ரஷ்ய ராணுவம் .

மேலும், 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட கெர்சன் பகுதியில் 20% பேர் ரஷ்ய நாட்டினார். கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த முக்கிய நகரமாக கெர்சன் பார்க்கப்படுகிறது. உக்ரைனில் நோவா, ககோவ்கா உள்பட இரு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில்,உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய படைகளைச் சேர்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.