கணவன் கண்முன் மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - வீரர்கள் அட்டூழியம்!
கணவனுக்கு முன்பு மனைவியை ரஷ்ய ராணுவ வீரர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
உக்ரேன் வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் ஒரு வீட்டுக்குள் நுழைந்து, கணவனை உலோகப் பொருளால் தாக்கி, பின்னர் அவரின் மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

அதை மண்டியிட்டுப் பார்க்கும்படி கணவனையும் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். நான்கு வயது சிறுமியையும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இரண்டு ராணுவ வீரர்களும் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
பகீர் குற்றச்சாட்டு
அங்கிருந்த வயதான தம்பதியை அடித்து, 41 வயது கர்ப்பிணிப் பெண், 17 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரும் உயிர் பிழைத்திருக்கின்றனர். மேலும், உளவியல் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
அவர்கள் அளித்த ஆதாரங்கள், வாக்குமூலங்கள், சாட்சிகளின் அடிப்படையில், ரஷ்யா ராணுவ வீரர்களின் 71,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்ற அறிக்கைகளை விசாரித்துவருகிறோம்.
இதுவரை 26 ரஷ்ய வீரர்களுக்கு போர்க் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறோம். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அரசு, ராணுவ வீரர்களின் அட்டூழியங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்துவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.