ரஷ்யாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா? - வலுக்கும் கண்டனங்கள்
உக்ரைன் நாட்டில் போரை நடத்தி வரும் நிலையில், தங்கள் நாட்டில் ரஷ்யா அரசு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ரஷ்யா அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த போர் மட்டும் நடைபெறவில்லை என்றால் ரஷ்யாவின் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும் என்ற ரீதியில் ரஷ்ய ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட சில ஊடகங்கள் உக்ரைன் போர் தொடர்பான கள நிலவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டன. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் உயிரிழப்புகள் தொடர்பாக சில ஊடகங்கள் நம்பமுடியாத உண்மையற்ற தகவல்களைப் பரப்புவதாக ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், படையெடுப்பு அல்லது போர் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்தி வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைப் பின்பற்ற மறுக்கும் ஊடகங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் இல்லையென்றால் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.இதுதொடர்பான எச்சரிக்கை நோட்டீஸை ரஷ்யா அங்குள்ள பல்வேறு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது.
மேலும் ராணுவ நடவடிக்கை தொடர்பான நம்பமுடியாத உண்மையற்ற தகவல்களை உடனடியாக நீக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த சேனலும் பிளாக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெ