உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் என்ன செய்வேன் தெரியுமா? - அதிபர் புதின் பகிரங்க மிரட்டல்
உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என போருக்கு முன்னால் அதிபர் புதின் பேசிய உரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில் உக்ரைன் உடனான போருக்கு முன்னல் ரஷ்ய அதிபர் புதின் ஆற்றிய ஒரு உரையில் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த உரையில் ராணுவ விவகாரங்களை பொறுத்தமட்டில் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும் ரஷ்யா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாகவுள்ளது.இது பல அதிநவீன ஆயுதங்களைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட நன்மையைக் கொண்டுள்ளது.
எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டைத் தாக்கினால் தோல்வியையும், அணு ஆயுத தாக்குதல் போன்ற பயங்கரமான விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார். புதின் உக்ரைன் விவகாரத்தை மனதில் வைத்து தான் இப்படி பேசியதாக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.