ரஷ்ய அதிபர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய் : வெளியான ஆடியோவால் பரபரப்பு !

Vladimir Putin
By Irumporai May 16, 2022 10:47 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது, இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான் என்றும் அது குறித்து ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், புதின் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரஷியஅதிபர் புதினுக்கு ஏற்பட்ட நோய் குறித்து அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவா் மற்றொரு தொழிலதிபருடன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் புதினுக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய் :  வெளியான ஆடியோவால் பரபரப்பு ! | Russian President Vladimir Putin Seriously

அதனால் அவாின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். அவா் வெறிபிடித்தவா் போல் நடந்து கொண்டதாக ஆடியோவில் ரஷிய தொழிலதிபா் கூறியுள்ளாா்.

இந்த ஆடியோவை ரஷிய தொழிலதிபருக்கு தொியாமல் அவா் பதிவு செய்துள்ளாா். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் லைன்ஸ்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.