ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் - உக்ரைன் தான் காரணம் என குற்றச்சாட்டு

ukrainewar russianoilgodown ukrainattacksrussia
By Swetha Subash Apr 01, 2022 02:04 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

 உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 37-வது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது ரஷ்யா.

தலைநகர் கீவை சுற்றி வளைத்து ரஷ்யா வான் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் நகரங்களின் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் - உக்ரைன் தான் காரணம் என குற்றச்சாட்டு | Russian Oil Godown Attack By Ukraine Forces

மேலும் ரஷ்ய படைகளை தனியாளாக நின்று பதிலடி கொடுத்து வருகிறது உக்ரைன் படைகள்.

இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் - உக்ரைன் தான் காரணம் என குற்றச்சாட்டு | Russian Oil Godown Attack By Ukraine Forces

தாக்குதலில் கொளுந்து விட்டு எரிந்து வரும் எண்ணெய் கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

மேலும், அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்ய ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ள நிலையில், இதுவரை உக்ரைன் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.