ரஷ்யாவுக்கு ஏற்பட்ட தோல்வி - கிண்டல் செய்யும் உக்ரைன்
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஏவுகணைகள் தோல்வியை தழுவியதாக உக்ரைனின் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யா போரை தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த எந்த முயற்சியும் இதுவரை பலனளிக்கவில்லை. தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்ற ரஷ்யப் படைகள் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 36 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து போர் நடைபெறும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. இதனிடையே பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா சுமார் 1,200 குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் 59 சதவீதம் வெடிக்கவில்லை என்று உக்ரைனின் ஆயுதப்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருமாத காலமாக நீடிக்கும் உக்ரைன் மீதான போரானது ரஷ்யாவுக்கு எவ்வளவு சிரமமானது என்பதை காட்டுகிறது. ஆனாலும் இந்த தகவல்கள் எங்கும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே உக்ரைனியர்கள் வெற்றியை நெருங்கி வருகின்றனர். நாடு அமைதியை நோக்கி நகர்ந்து முன்னேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.