உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதல் - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ
உக்ரைன் போர்
உக்ரைன் போர் 100 நாட்களை கடந்தும் முடியாத தொடர்கதையாக உள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன. உக்ரைனில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், பாரம்பரிய தளங்கள் ரஷிய துருப்புக்களால் அழிக்கப்பட்டுள்ளன என்றும், ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுவதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் அழித்துள்ளன என்றும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் நிலவரம் குறித்து தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவுக்கு தங்க இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்தது.
இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால் அது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். உலக சந்தையில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது. ரஷ்யாவிற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை சம்பாதித்து கொடுக்கிறது தங்க ஏற்றுமதி. எனவே ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தின் இறக்குமதியை நாங்கள் தடைசெய்வோம் என்று தெரிவித்தார்.
வைரலாகும் வீடியோ -
உக்ரைனின் Kremenchuk நகரத்தில் உள்ள மால் ஒன்றில் கடந்த 27ம் தேதி ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிந்தனர். மேலும் 100-க்கு மேற்பட்டோர் காயம் என தகவல் வெளியானது.
தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கட்டிங்கள் இடிந்து தரைமட்டமானது. மக்கள் இங்கும், அங்கும் ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
Russia's pathological lies are refuted by numerous videos of a missile hitting a shopping center in Kremenchuk. In the UN Security Council Russia blatantly lied that strike was carried out on ammunition depot, and the shopping center "was not damaged." pic.twitter.com/esV2O7GXpL
— Maria Avdeeva (@maria_avdv) June 29, 2022
1/ Russia's murderous strike on a shopping mall in Kremenchuk has rightly been condemned as a crime, but was it also a mistake, as Tallyrand might have said? I think there's a case for arguing it was both, due to the bad choices Russia made. A short ?.pic.twitter.com/wwhCZj3zzQ
— ChrisO (@ChrisO_wiki) June 28, 2022