அமெரிக்க ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி தாக்குதல் நடத்திய ரஷ்ய விமானம் : பதட்டத்தில் உலக நாடுகள்
அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் ரஷ்ய போர் விமானம் மீது மோதியதாக தகவல் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனிப்போர்
உலகில் ராணுவ பலத்தில் மிகப்பெரிய நாடுகளாக உள்ளவை அமெரிக்காவும் ரஷ்யாவும் , கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையே பனிப்போர் நிலவி வருகின்றது. ரமாக கண்காணித்து வருகி குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போரில் இரு நாடுகளும் கடும் மோதல் போக்கு நிலவி வருகின்றது, இதன் காரணமாக இரு நாடுகளுன் ஒன்றை ஒன்று தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
ட்ரோன் விபத்து
இந்த நிலையில் ரஷ்ய விமான படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது அமெரிக்காவிக்கு சொந்தமான ட்ரோன் மீது மோதியுள்ளது , இந்த சம்பவம் தற்போது இரு நாடுகளுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், சேதமடைந்த அமெரிக்காவின் ட்ரோன் இதுவரை மீட்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் கூறுகையில் ரஷ்யாவின் Su-27 ரகத்தை சேர்ந்த 2 ஜெட் விமானங்கள் சர்வதேச வான் வழி எல்லையினை கண்காணிக்கும் போது அமெரிக்க ட்ரோன் மீது எண்ணெயை கொட்டினார் , பின்னர் அமெரிக்க ட்ரோன் மீது மோதியதாக கூறியுள்ளது.

பதட்டம்
இந்த நிலையில் ரஷ்யா கூறுகையில் அமெரிக்காவின் ட்ரோன் கட்டுப்பாடற்று தங்களின் விமானத்தின் மீது மோதி நீர் பரபரப்பில் வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்து வரும் நிலையில் அமெரிக்கா ட்ரோன் மீது ரஷ்ய விமானம் மோதியுள்ளது சரவ்தேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.