இந்தியாவுடனான கூட்டணி தான் எங்களுக்கு முக்கியம் - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்
உக்ரைன் மீது ரஷ்யா 37-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இன்று நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி,
"தற்போதைய நாட்களில் நமது மேற்கத்திய நாடுகள் எந்த விதமான சர்வதேச பிரச்சினை வந்தாலும் அதை உக்ரைன் விவகாரமாக சுருக்குகின்றன. நாங்கள் எதற்கும் சண்டையிடப்போவதில்லை.
இந்தியா இந்த சூழ்நிலையை ஒருதலைப்பட்சமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்தியா - ரஷ்யா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது. அது தான் எங்களுக்கு முக்கியம். உலக அமைப்பை சமநிலையில் வைத்திருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.
நாங்கள் இருநாட்டு உறவையும் மேலும் வலுப்படுத்தியுள்ளோம். எங்கள் அதிபர் (ரஷ்ய அதிபர் புதின்) பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்’ என்று தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா இதுவரை நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.