முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம் : கலக்கத்தில் ரஷ்யா

Russo-Ukrainian War Russian Federation
By Irumporai Oct 02, 2022 08:45 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்ய டைகள் கைப்பற்றின.

உக்ரைன் ரஷ்யா போர்

அதன்பின்னர்  சில பகுதிகள் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது.

முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம் : கலக்கத்தில் ரஷ்யா | Russian Forces Push Back And Ukrainian Army

இந்தநிலையில் ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்தன.

ரஷ்யாவுக்கு பின்னடைவு

அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷ்

ய படைகள் பின் வாங்கின. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷியா பயன்படுத்தி வந்தது. ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும்.

அங்குள்ள லைமனை உக்ரைன் படைமீட்டுள்ளது ரஷ்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதற்கிடையே ரஷ்யஅதிபர் புதினின் ஆதரவாளரான செச்சினியா பிராந்திய தலைவர் கதிரோவ் கூறும்போது, எனது தனிப்பட்ட கருத்துப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறைந்த பாதிப்பு கொண்ட அணு ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்து வதை ரஷ்யா பரிசீலிக்க வேண்டும் எனக் கூறினார்.