உக்ரைனிலிருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள் ; போர் பதற்றம் முடிவுக்கு வருகிறதா?

ukrainerussia wartensioncomestoend forcesreturnbacktobases russianforces borderconflict
By Swetha Subash Feb 15, 2022 10:02 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பெரிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன.

இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேடோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உக்ரைனிலிருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள் ; போர் பதற்றம் முடிவுக்கு வருகிறதா? | Russian Forces Near Ukraine Returning To Bases

இரு நாடுகளுக்கும் இடையில் எப்பொழுது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த சூழலில் இந்தியா உள்பட பல நாடுகளும் உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.

பதற்றத்தை தணிக்க உக்ரைன் ரஷ்யாவுடன் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிபர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் உக்ரைன் எல்லையில் உள்ள படைகளை ரஷ்யா குறைத்து வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனிலிருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள் ; போர் பதற்றம் முடிவுக்கு வருகிறதா? | Russian Forces Near Ukraine Returning To Bases

உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளில் சிலவற்றை ரஷ்யா திருப்பி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

எல்லையில் குவித்துள்ள வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா குறைத்து வருவதை உக்ரைன் அரசும் உறுதி செய்துள்ளது.