உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம் - ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

russiaukraineconflict russiacaptureskherson russiawaronukraine
By Swetha Subash Mar 02, 2022 07:42 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா இன்றுடன் 7-வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் தாம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க மூலக்காரணம் என்று கூறப்படுகிறது.

உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம் - ரஷ்ய ராணுவம் அறிவிப்பு | Russian Forces Capture Kherson Of Ukraine

இந்நிலையில், கார்கிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைய சதுக்க கட்டிடத்தின் மீது ராக்கெட் குண்டுவீச்சு தாக்கி வரும் ரஷ்ய ராணுவம் கார்கிவ் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம் - ரஷ்ய ராணுவம் அறிவிப்பு | Russian Forces Capture Kherson Of Ukraine

ரஷ்யாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியிருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.