குகேஷ் வெற்றி குறித்து சந்தேகம் கிளப்பும் ரஷ்யா - என்ன நடந்தது?
குகேஷ் வெற்றி தொடர்பாக ரஷ்யா சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
குகேஷ் வெற்றி
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரன் ஆகியோர் களமிறங்கினர்.
மொத்தம் 14 சுற்றுகளில், குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வென்றிருந்த நிலையில், மற்ற போட்டிகள் டிராவில் முடிந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளைப் பெற்றிருந்தனர். கடைசி போட்டி 14வது சுற்றுப் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார்.
சர்ச்சை பேச்சு
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ், "ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் நடந்த சில விஷயங்கள் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது.
அப்போது சீன செஸ் வீரரின் அந்த மூவ் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். டிங் லிரன் அப்போது இருந்த நிலையில் இருந்து, தோற்று இருக்கிறார் என்பதை ஏற்க முடியாது.
ஆட்டத்தில் சீன செஸ் வீரரின் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது. அவர் ஏதோ வேண்டுமென்றே தோல்வி அடைந்தது போலவே தெரிகிறது" என சர்ச்சையை கிளப்பியுள்ளார்.