Google: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்.. நீதிமன்றம் அதிரடி - இதுதான் காரணம்!
தவறான கருத்துக்களை நீக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீடிக்கும் போர்
ரஷ்யா-உக்ரைன் இடையான போர் ஒன்றரை ஆண்டுகள் கடந்து தற்போதும் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் இந்த போரால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் தங்களைத் தற்காத்துக்கொள்ள உக்ரைனும் ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் மேற்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
கூகுளுக்கு அபராதம்
இந்நிலையில் ரஷ்யா குறித்த தவறான கருத்துக்களை நீக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீதான போரை சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷ்யா கூறி வருகிறது.
ஆனால் கூகுள் நிறுவனம் இதனை பயங்கரவாத, ஆதிக்க போராக குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இது போன்ற கருத்துக்களை நீக்க விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் ரஷ்ய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என கூறி, கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.