தமிழ் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ரஷ்ய நாட்டு தம்பதி - ஆலயங்களில் தரிசனம்!

1 மாதம் முன்

ரஷ்ய நாட்டு கணவன் மனைவி தமிழ் கலாச்சாரத்தின் பால் ஈர்க்கப்பட்டு, ஜோதிடத்தின் மீது நம்பிக்கையால் ஆலயங்களில் தரிசனம் செய்து வருகின்றனர். 

ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர்கள் அலெக்ஸி - மாயா தம்பதியினர் தங்களது மூன்று வயது குழந்தையுடன், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆலய தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ரஷ்ய நாட்டு தம்பதி - ஆலயங்களில் தரிசனம்! | Russian Couple Worships Hindu Gods In Tn

தமிழ் கலாச்சாரத்தில் ஈர்க்கப்பட்ட இவர்கள், ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள். மாஸ்கோவில் இருந்து தமிழகம் வந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களாக சுற்றிப்பார்த்து அதன் கலை நுணுக்கங்களை அறிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் அருகே நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ள பரணி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமான அக்னீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து ஆலயத்தை சுற்றி பார்த்தனர்.

தமிழ் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ரஷ்ய நாட்டு தம்பதி - ஆலயங்களில் தரிசனம்! | Russian Couple Worships Hindu Gods In Tn

மேலும் திருநள்ளாறு திருநாகேஸ்வரம் சூரியனார் கோயில் வைத்தீஸ்வரன் கோயில் திருக்கடையூர் உள்ளிட்ட ஆலயங்களில் தரிசனம் முடித்து நாடு திரும்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கிராமக் கோயில்களில் தரிசனம் செய்ய செல்லும் அவர்களை உள்ளூர் பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்ற பண்டைய சிற்பங்களை அவர்களுக்கு புரியும்படி விளக்கி கூறுகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.