உக்ரைனை சுற்றி வளைத்து தாக்க ரஷ்யா முடிவு - கதறும் பொதுமக்கள்
உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷ்ய படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே போரை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்த நிலையில் அதனை உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இதனால் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டுள்ளது. அதன்படி உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து திசைகளிலிருந்தும் தாக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு வாழும் மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan
நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை IBC Tamil