எரிபொருள் இல்லாமல் நடுவழியின் நின்ற ரஷ்ய வீரர்கள் - பயப்படாமல் கேலி செய்த உக்ரைன் நபர்

ukraine russianarmy russianarmystuckoutoffuel
By Petchi Avudaiappan Feb 27, 2022 12:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவ வீரர்களுடன் உக்ரைன் நபர் ஒருவர் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் ரஷ்யாவின் டாங்கி வாகனம் எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் ரஷ்ய ராணுவ வீரர்களிடம், போரிட்டு நீங்கள் உடைந்து விட்டீர்களா என கேட்கிறார். அதற்கு வீரர்கள் வண்டியில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கின்றனர். 

உடனடியாக உக்ரைன் நபர் நான் வேண்டுமானால் உங்களை ரஷ்யாவுக்குத் திரும்ப கொண்டு போய் விடட்டுமா என கிண்டலாக கேட்க, அதற்கு வீரர்கள் சிரிக்கிறார்கள். பின் நீங்கள் எங்கே போகிறீர்கள் என தெரியுமா? என்று உக்ரைன் நபர் கேட்க வீரர்கள் தெரியாது என பதிலளிக்கிறார். 

தொடர்ந்து ராணுவ வீரர்களிடம் அந்த நபர் தான் தலைநகர் க்யூவை நோக்கி போவதாக கூற், ஊடகங்களில் என்ன மாதிரியான செய்தி சென்று கொண்டிருக்கிறது என்று வீரர்கள் பதிலுக்கு கேட்கிறார்கள். உடனடியாக சற்றும் பயப்படாமல் உக்ரைன் நபர் நாங்கள் (உக்ரைன்) ஜெயித்துக் கொண்டிருக்கிறோம். ரஷ்யா எங்களிடம் சரணடைந்து வருகிறது என தெரிவிக்கிறார். அதற்கு காரணம் அவர்கள்(ரஷ்யா ) எங்கு செல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது என நக்கலாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.