ரஷ்யா - உக்ரைன் போர் : தாக்குதல் நடத்திய 5 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் படை

ukraineblastsrussianaircraft russianaircraft5blasted ukrainerussiawarstarted
By Swetha Subash Feb 24, 2022 06:17 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

உகரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது, உலக அரங்கில் போர் பதற்றத்தை அதிகமாக்கியுள்ளது.

உகரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான படை வீரர்களை ஏற்கனவே குவித்திருந்தது.

இந்த நிலையில் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இந்த நிலையில் போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை தாக்க தொடங்கியுள்ளது. ரஷ்யா.

ரஷ்யா - உக்ரைன் போர் : தாக்குதல் நடத்திய 5 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் படை | Russian 5 Aircrafts Blasted By Ukraine Force

ஓடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய 5 ரஷிய போர் விமானங்களை உகரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த செய்தியை உக்ரைன் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும்  உகரைன் நாட்டின் விமானததளங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.