நுரையீரலுக்குள் இருந்த Metal Spring..சளிக்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

World Russia
By Vidhya Senthil Jan 05, 2025 04:15 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

தொடர்ந்த இருமல், சளியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நுரையீரலில் ஸ்ப்ரிங் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா

ரஷ்யாவில் வசித்து வருபவர் இளம்பெண் படுலினா. இவர் சமீபகாலமாகச் சளி மற்றும் இருமலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவப்போது மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். ஆனாலும் சளி மற்றும் இருமல் சரியாகவில்லை. இதனால் படுலினாவின் உடல்நிலை ஒரு கட்டத்தில் மிகவும் மோசமானது.

பெண்ணின் நுரையீரலில் ஸ்ப்ரிங் இருந்த சம்பவம்

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது படுலினாவின் நிலைமையைப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு இந்த தொடர் சளி நிமோனியாவின் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவமனையில் நினைத்து சிகிச்சை அளித்தனர்.

இறந்த கணவரின் விந்தணுவிற்காக போராடிய மனைவி - காரணத்தை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள்

இறந்த கணவரின் விந்தணுவிற்காக போராடிய மனைவி - காரணத்தை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள்

ஆனால் தொடர்ந்து சளி மற்றும் இருமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவரது நுரையீரலில் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு ஸ்ப்ரிங் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஸ்ப்ரிங்

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் ரத்த ஓட்டத்தில் உள்ள ஸ்ப்ரிங்கை அகற்றினர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,’’படுலினா ரத்த உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அப்போது, அவரது உடலில் ஸ்பிரிங் பொருத்தப்பட்டுள்ளது.

russia women affected by metal spring in lung

இது ரத்த ஓட்டத்தின் மூலமாக அந்த ஸ்ப்ரிங் நுரையீரலுக்குச் சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.